மேல்மலையனூரில் புதிய ரேஷன் கடை கட்டிடம்

மேல்மலையனூரில் புதிய ரேஷன் கடை கட்டிடம்

ரேஷன் கடை திறப்பு 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில், செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம் பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மேல்மலையனூர் ஒன்றியக் குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார் .ஒன்றிய கவுன்சிலர் யசோதரை சந்திரகுப்தன் முன்னிலை வகித்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ரேஷன் கடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி பேசினார். இதில் வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன், தாசில்தார் முகமது அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசண்முகம், சையத் முகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story