புதிய நியாய விலை கடை திறப்பு

புதிய நியாய விலை கடை திறப்பு
X

புதிய நியாய விலைக்கடை திறப்பு 

திருவண்ணாமலை மாவட்டம், குத்தனூர் கிராமத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது.

செய்யாறு அருகே வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் குத்தனூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 2023 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 9 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

உடன் மாவட்ட கழக துணை செயலாளர் கா.லோகநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜு, மாவட்ட நெசவாளர் அமைப்பாளர் A.N.சம்பத், ஒன்றிய கழக செயலாளர்கள் N.சங்கர், M.தினகரன் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story