கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடை திறப்பு விழா

X
புதிய நியாய விலை கடை திறப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆலத்தூர் பகுதியில் புதிய ரேஷன் கடையை ஒன்றிய சேர்மன் திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். விழாவில் உதயசூரியன் எம்.எல்.ஏ., ரேஷன் கடையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்.
விழாவில் தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் அரவிந்தன், சின்னசேலம் ஒன்றிய துணைச் சேர்மன் அன்புமணிமாறன், சங்கராபுரம் நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
