ஓரிக்கை கிஷ்டப்பா நகரில் புதிய தார்சாலை அமைப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டுக்கு உட்பட்ட கிஷ்டப்பா நகரில் 160 மீட்டர் நீளத்திற்கு புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டுக்கு உட்பட்ட கிஷ்டப்பா நகரில், பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதனால், சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 160 மீட்டர் நீளத்திற்கு நேற்று புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது. இருப்பினும், பிரதான சாலையில் மட்டுமே தார்ச்சாலை போடப்பட்டது. கிஷ்டப்பா நகர் குறுக்கு தெருவில் சாலை வசதி இல்லை. இந்நிலையில் பிரதான சாலையில், தார்ச்சாலை போடப்பட்டதால், குறுக்கு தெரு பள்ளமாகிவிட்டது. இதனால், மழைநீர் வெளியேற வழி இல்லாமல் உள்ளது. எனவே, கிஷ்டப்பா நகர் குறுக்கு தெருவிலும் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.



Tags

Next Story