பூட்டிகிடக்கும் புதிய பள்ளி கட்டிடம் – மாணவர்கள் அவதி

பூட்டிகிடக்கும் புதிய பள்ளி கட்டிடம் – மாணவர்கள் அவதி

திறக்கப்படாமல் உள்ள பள்லிகட்டிடம்

திருப்பத்தூர் மாவட்டம், தென்பழஞ்சியில் ஆறு மாத காலமாக திறக்கப்படாமல் பூட்டி இருக்கும் புதிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை உடனே திறக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தென்பழஞ்சி கிராமத்தில் நடுநிலைபள்ளி கூடுதல் பள்ளிக்கட்டிடம் கட்டி முடித்து ஆறு மாதம் காலமாக பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம் சுற்றியும் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து முட்புதர்களாக காட்சியளிக்கிறது. மேலும் அதன் அருகில் சுகாதார வளாகம் 2021 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் அந்தக் கட்டிடம் வெளியேற்ற தெரியாத அளவுக்கு சீமை கருவேல மரங்கள் செடி கொடிகள் படர்ந்து காட்சியளிக்கிறது.மேலும் புதிய பள்ளி கட்டிடத்திற்குள் மனித கழிவுகளால் நுழைய முடியாத அளவுக்கு சுகாதாரமற்ற முறையில் உள்ளது. திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி நடுநிலையப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டிய பின்பும் கட்டிடத்தை பள்ளி பயன்பாட்டிற்காக இன்னும் திறக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தென்பழஞ்சி மந்தை திடல் நாடக மேடை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் தற்போது செயல்பட்டு வரும் பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்ததால் அதற்கு பதிலாக கால்நடை மருத்துவமனை எதிரே பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 18,80,000 ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் பூட்டிய கிடக்கிறது கட்டடத்தை சுற்றி சீமை கருவேலம் மரங்கள் செடி கொடிகள் வளர்ந்துவிட்டன.

தற்போதுள்ள பள்ளி கட்டிடத்திலும் அருகில் உள்ள பள்ளி கட்டிடத்திலும் ஐந்து வகுப்பறைகள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. நெருக்கடியால் பல நேரங்களில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் அடியில் அமர வைத்து பாடம் நடத்தப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story