புதிய பட்டுக்கூடு அங்காடி :முதல்வருக்கு நன்றி தெரிவித்த ராஜேஷ்குமார் எம்பி

திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல ராசிபுரத்தில் ரூ.2.20கோடி மதிப்பீட்டில் புதிய பட்டுக்கூடு அங்காடி அமைக்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நன்றி தெரிவித்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் பேசும் போது, நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் தொடர்பான மானிய கோரிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணையின்படி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் அணைக்கட்டிபாளையம் கிராமத்தில் அனைத்து வசதிகளின் வசதிகளுடன் கூடிய ஒரு புதிய பட்டுக்கூடு அங்காடி அமைக்கப்படும் என்கின்ற அந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

ஏறத்தாழ 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த பட்டுக் கூடு அங்காடி என்பது e-ஆக்சன் வரை மின்னணு ஏலம் முறையின் கீழ் இந்த பட்டுக்கூடு அங்காடி அமைக்கப்படும். இதற்காக நேற்றைய தினம் அந்த அறிவிப்பில் 2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அது அமைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள் இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடைய அனுமதியோடு சம்பந்தப்பட்ட துறையும் சார்ந்து இந்த பகுதியிலே அணைக்கட்டுபாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான முறையான முன்மொழிவு அனுப்பப்பட்டு பட்டு வளர்ச்சி துறைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு அந்த பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது.

ராசிபுரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளான நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பட்டுக்கூடு பெருமளவிலே உற்பத்தி செய்யப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் ராசிபுரத்தில் பட்டு மையம் அமைக்கப்படும் என்று அந்த அறிவிப்பை அப்பொழுது வழங்கியிருந்தோம். அந்த அடிப்படையில் ஆட்சி அமைந்த உடன் ராசிபுரத்தில் பட்டு ஏல மையம் என்பது தற்காலிக கட்டிடத்தில் முத்துக்காளிப்பட்டியில் இயங்கி வந்தது. இதுவரை அங்கு 110 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகள் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருக்கிறது. இப்பொழுது நிரந்தரமாக மின்னணு ஏல முறையுடன் அதிநவீன வசதியுடன் விவசாயிகள் எளிதாக வந்து தங்கள் பட்டுக்கூடுகளை அதிக விலைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் பங்கேற்கின்ற வகையில் இந்த பட்டு ஏல மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இனி இந்த பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள் தங்களுடைய தாங்கள் உற்பத்தி செய்கின்ற அந்த பட்டுக்கூடுகள் மிக அதிக லாபத்துடன் அவருடைய விற்பனை விலை என்பது இங்கே கூடுதலாக கிடைக்குகின்ற வகையிலே இது மின்னணு ஏலமுறையில் அமைக்கப்பட இருக்கின்றதால் பல்வேறு இடங்களிலிருந்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் பங்கேற்பதற்கான அந்த வாய்ப்பும் இருக்கிறது. இந்த பகுதியினுடைய விவசாயிகளுடைய இந்த நீண்ட நாள் கோரிக்கையை நம்முடைய தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர், அதேபோன்று நம்முடைய இந்த துறையின் அமைச்சர், இதற்கு அதிவேகமாக இந்த இடம் ஒதுக்கீடு செய்த நம்முடைய மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் பட்டு உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகளின் சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இடம் நிலம் தேர்வு செய்யப்பட்ட உரிய நடைமுறைக்கு உட்பட்டு அந்த இடம் வருவாய்த் துறையில் இருந்து பட்டு வளர்ச்சி துறைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு கெட்ட மதிப்பீடுகள் செய்ய தயார் செய்யப்பட்டு இந்த பணிகள் தெளிவாக இன்னும் இரண்டு மாதங்களில் இந்த பட்டுக் கூடு சிறப்பு அங்காடி அமைக்கின்ற இந்த கட்டுமான பணி தொடங்கும். இதுவரை 2023 - 2024 ஆம் ஆண்டில் மட்டும் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகள் ராசிபுரம் பட்டு ஏல மையத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. முன்பு கையெழுத்து பரிமாற்றம் என்று சொல்லப்படுகின்ற வகையிலே சாதனம் மூலமாக அது செய்யப்படவில்லை. இப்பொழுது அமைக்கப்படுகின்ற இந்த நவீன வசதியுடன் கூடிய இந்த மையத்தில் மின்னணு முறை மூலமாக அந்த பட்டுக்கூடு விவசாயிகளும், வியாபாரிகளும் நேரடியாக பங்கு பெற்று அதனால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் தரமான பட்டு கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பு இது வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது ராசிபுரம் ஒன்றிய திமுக செயலாளரும், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவருமான கே.பி.ஜெகநாதன், ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன், ராசிபுரம் வருவாய் அலுவலர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் அமுதா, நில அளவை தலைமை அலுவலர் பூங்குன்றன், கூனவேலம்பட்டி அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.சரவணன், சிவசேகரன், துணை செயலாளர் ரவி, கிளைச் செயலாளர் ஜெய்கணேஷ், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story