பட்டுக்கோட்டையில் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம்
ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்
நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு, தீபாவளியைக் கொண்டாடும் வகையில், சம்பள பாக்கியை நிலுவையின்றி வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தியும், கூலியை ரூ 600 ஆக அதிகரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து, திட்டத்தை சீர்குலைத்து வருவதைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திங்கள்கிழமை ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், எம்.செல்வம் கண்டன உரையாற்றினர். விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், ஒன்றியச் செயலாளர் தமிழ்செல்வன், கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெஞ்சமின், ஞானசூரியன், ஜீவானந்தம், சாமிநாதன், உலகநாதன், சரோஜா மற்றும் கிளைச் செயலாளர்கள், நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.