புதிய தமிழகம் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி: கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி: கிருஷ்ணசாமி

செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழக கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு இராஜபாளையத்தில் வரவேற்பு. செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி 40 தொகுதிகளிலும் அதிமுக புதிய கட்சி கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது எனக் கூறினார்.

மேலும் தற்போதைய தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் க திமுக அரசு தேர்தலுக்கு தேர்தல் புதிய வாக்குறுதிகலை கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்க பெற நினைக்கிறது. எங்கள் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

மேலும் தென்காசி தொகுதில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால் சென்னை கோவை பகுதிகளுக்கு செல்கின்றனர் மற்ற ஊர்களுக்கு செல்வதை தடுத்து தென்காசி தொகுதியில் வேலை வாய்ப்பு உருவாக்கி தருவோம் எனக் கூறினார்

Tags

Next Story