மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்கம்
மேட்டூர் அனல் மின் நிலையம்
மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதால் நிறுத்தப்பட்டிருந்த மின் உற்பத்தி பணி மீண்டும் துவங்கியது.
மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. புதிய அனல் மின் நிலையத்தில் கடந்த 16-ந் தேதி கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, கொதிகலன் குழாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முடிவடைந்ததை அடுத்து நேற்று காலை முதல் இந்த அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
Next Story