டெல்டா மாவட்ட மக்களுக்கு புதிய ரயில்

டெல்டா மாவட்ட மக்களுக்கு புதிய ரயில்

திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையே திங்கள் முதல் வெள்ளி வரை ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையே திங்கள் முதல் வெள்ளி வரை ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கவனத்திற்கு!... சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களின் திருவாரூர்↔️பட்டுக்கோட்டை புதிய டெமு இரயில் மே மாதம் 2ஆம் முதல் இயக்கப்பட்டு வருகின்றது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். 1. திருவாரூரில் இருந்து காலை 8:30 க்கு புறப்பட்டு வண்டி எண் 06851 திருவாரூர் - பட்டுக்கோட்டை டெமு பயணிகள் இரயில் பட்டுக்கோட்டைக்கு காலை 10:05 மணிக்கு சென்று அடையும். 2. பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு வண்டி எண் 06852 திருவாரூக்கு இரவு 7:00 மணிக்கு சென்று அடையும். இந்த ரயில் 6 பெட்டிகள் கொண்ட டெமு இரயில் பயணிக்க எளிதில் டிக்கெட் கிடைக்கும். இந்த டெமு இரயில் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, மாவூர், ஆலந்தம்பாடி, திருநெல்லிக்காவல் ஆகிய ஊர்களிலும் நின்று செல்லும். மேலும் மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் வேளாங்கண்ணி இணைப்பு இரயில் மூலமாக பயணிப்பதற்கு வசதிக்கு ஏற்றவாறு சென்று வருவதற்கு மிகவும் பயன்யுள்ளதாக அமைந்து உள்ளது. டெல்டா மாவட்ட சேர்ந்த விவசாய பெருமக்கள், வியாபார பெருமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் சிறப்பான பயணம் அடைய அன்புடன் அழைக்கிறோம்.

Tags

Read MoreRead Less
Next Story