புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி !

புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி !
டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி
தென்காசி அருகே புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் மயிலபுரம் பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரமாக வழங்கப்படுவதால் மிக்சி, கிரைண்டர், டிவி போன்றவை சரியாக இயங்கவில்லை என கவுன்சிலர் சங்கர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவ பத்மநாதனிடம் தலைமையில் மனு வழங்கினார். அதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று மாலையில் ஏற்கனவே இருந்த டிரான்ஸ்பார்மர் அகற்றப்பட்டு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதை கண்ட பகுதி பொதுமக்கள் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் கவுன்சிலர்களை வெகுவாக பொதுமக்கள் பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story