கன்னியாகுமரியில் நாளை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்

கன்னியாகுமரியில் நாளை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்

கன்னியாகுமரியில் நாளை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
கன்னியாகுமரியில் நாளை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நட்சத்திர ஹோட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது. மேலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது அதிர் வேட்டுகள் முழங்க, பலூன்கள் பறக்க விடப்பட்டு, கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரியில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க வெளிநாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ்காரர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீஸ் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

Tags

Next Story