T.gode (Mallasamudram) King 24x7 |6 Aug 2024 1:03 PM GMT
மல்லசமுத்திரத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில், 638மனுக்கள் பெறப்பட்டது. 21மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மல்லசமுத்திரம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில், மின்சார வாரியம், ஊராட்சிதுறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் மையம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பால்வளம், நகர்புறவளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவு, சுகாதாரம், போலீஸ், தொழிலாளர்நலன், மகளிர் உரிமை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 638மனுக்கள் பெறப்பட்டது. இதில், 21மனுக்களுக்கு உடனடிதீர்வு காணப்பட்டது. தி.மு.க., நகரசெயலாளர் திருமலை, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில், பி.டி.ஓ.,க்கள் சுந்தரம், அருளப்பன், வேளாண் உதவி இயக்குனர் யுவராஜ், மின்சாரவாரிய ஏ.டி.,அமுதா, வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ், ஊராட்சிமன்ற தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Next Story