மாரம்பாளையத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள காளியம்மன் கோவிலை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம், மாரப்பம்பாளையம் அருந்தியர் தெரு அருகாமையில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் ஒன்று உள்ளது. இந்நிலத்தில், கடந்த 30வருடங்களாக காளியம்மன் கோவில் அமைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதன் அருகாமையில் உள்ள தனிநபர் ஒருவர் கோயில் முன்பு ஆக்கிரமிப்பு செய்து மண்ணைக் கொட்டி பாதை அமைத்துள்ளார். இதனை அளவீடு செய்து தகுந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியின் அடிப்படையில், அதிகாரிகள் அளவீடு செய்தனர். ஆனால், காளியம்மன் கோவில் இடத்தை அரசு பதிவேற்றில் ஏற்றம் செய்யவில்லை. எனவே, ஆக்கிரமித்து செய்யப்பட்டுள்ள நிலத்தை மீட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று காலை 11மணியளவில், இலுப்புலி வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பாக, மார்க்சிஸ்டு கம்யூ.,கட்சியின் கிளை செயலாளர் தங்கவேல் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன், மூத்த தோழர்.பெரியசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ், கிட்டுசாமி, பாலகிருஷ்ணன், ஈஸ்வரன், ராஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஆர்.ஐ.,அனுராதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சம்மந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story