
X
T.gode (Mallasamudram) King 24x7 |8 Aug 2024 3:44 PM ISTஎலச்சிபாளையம் பஸ்நிறுத்தத்தில், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மறைவிற்கு இரங்கல் கூட்டம் நடந்தது.
மேற்குவங்க முன்னார் முதல்வர் புத்ததேவ்பட்டாச்சார்யா நேற்று, வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 2001முதல் 2011ம்ஆண்டு வரையில், மேற்கு வங்கத்தில் முதல்வராகவும், அரசியல் தலைமைகுழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். எனவே, அவரது மறைவிற்கு நேற்று, எலச்சிபாளையம் பஸ்நிறுத்தத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்டு கம்யூ.,கட்சியின் சார்பில், இரங்கல் கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் த.சத்யராஜ், து.சதீஷ்குமார், சி.ஐ.டி.யு., மோட்டார் சங்க நிர்வாகிகள் சக்திவேல், முனியப்பன், சி.பி.எம்., மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ரமேஷ், பாலகிருஷ்ணன், ஈஸ்வரன், மூத்த தோழர் பெரியசாமி உள்ளிட்டவர் கலந்து கொண்டு மலர் தூவி இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
Next Story
