
X
T.gode (Mallasamudram) King 24x7 |10 Aug 2024 4:08 PM ISTகொன்னையார் அரசு துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைகுழு மறுகட்டமைப்பு நிகழ்வு நடந்தது.
எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று, இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன் அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் பள்ளி மேம்பாடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைகுழு மறுக்கட்டமைப்பு நிகழ்வு நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் உமா கலந்துகொண்டு மறுகட்டமைப்பு முக்கியத்துவம் குறித்து உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ், எலச்சிபாளையம் வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடாசலம், வட்டார வள மையம் மேற்பார்வையாளர் மகாலிங்கம், தலைமை ஆசிரியர் நடேசன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியன் பயிற்றுநர்கள் உடன் இருந்தனர்.
Next Story
