T.gode (Mallasamudram) King 24x7 |10 Aug 2024 2:54 PM GMT
மல்லசமுத்திரம் ஒன்றியத்தில், 85பயனாளிகளுக்கு கலைஞர் கனவுஇல்ல ஆணையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
நேற்று, நாமக்கல் மாவட்டம் முழுவதும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் அதற்கான ஆணையை வழங்கினார். அதன்படி, மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட, 85 பயனாளிகளுக்கு ரூ.2.98கோடி மதிப்பிலான ஆணையை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் திரு.எஸ்.எம்.மதுராசெந்தில் முன்னிலையில் வழங்கபட்டது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் பழனிவேல், நகரசெயலாளர் திருமலை, திட்டஇயக்குனர் வடிவேல், பி.டி.ஓ.,க்கள் சுந்தரம், அருளப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story