T.gode (Mallasamudram) King 24x7 |12 Aug 2024 12:35 PM GMT
வேளாண்மைதுறையின் சார்பில் விவசாயிகளுக்கு வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பயிற்சி நடந்தது.
எலச்சிபாளையம் வட்டாரம், வேளாண்மைத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின்கீழ் எலச்சிபாளையம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் கால்நடைத்துறை சார்ப்பில் நேற்று, 40விவசாயிகளுக்கு வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பயிற்சி நடந்தது. உஞ்சனை கால்நடை மருத்துவர் தட்சிணாமூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு, கால்நடைகளில் ஏற்படும் நோய் தொற்று கட்டுபாடு மற்றும் குடல்புழு நீக்க முறைகள் பற்றி கூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார் .எலச்சிபாளையம கால்நடை மருத்துவர் பாலாஜி அவர்கள் கால்நடைத்துறை சார்ந்த திட்டங்கள் பற்றி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் ராமசாமி அவர்கள் வேளாண்மைத்துறை சார்ந்த மத்திய, மாநில திட்டங்கள்,வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் இடுபொருட்கள் பற்றி விவசாயிகளுக்கு கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் ராஜதுரை அவர்கள் வேளாண்மைதுறை மானியத்திட்டங்கள் பற்றியும், உதவி தோட்டக்கலை அலுவலர் நந்தினி தோட்டக்கலைத்துறை மானியத்திட்டங்கள் பற்றியும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் திவாகர் அவர்கள் அட்மா திட்டத்தின் செயல்பாடுகளை பற்றி விரிவாக எடுத்து கூறினார்கள். இப்பயிற்சிகான ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story