ஆன்றாம்பட்டி கிராமத்தில், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர்மேலாண்மை குறித்த பயிற்சி நடந்தது.
எலச்சிபாளையம் வட்டாரம், ஆன்றாபட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம், "பயறுவகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை" தலைப்பின்கீழ், 40 விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியல் எலச்சிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.பெ.ஜெயமாலா அவர்கள் தலைமை வகித்து, பயிர் சாகுபடியில் மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம், உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி முறைகள், நுண்ணூட்ட பயன்பாட்டின் பயன்கள், உர மேலாண்மை போன்ற பயறுவகைப் பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். ஓய்வுபெற்ற துணை தோட்டக்கலை அலுவலர் திரு.முருகவேல் அவர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு பயறுவகைப்பயிர்களில பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயன்பாடு மற்றும் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்ட முறைகள் பற்றி விளக்கமளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் திரு.சக்திவேல் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வைக்கப்பட்டுள்ள இடுபொருட்கள் விபரங்கள் மற்றும் வேளாண்மைத்துறை மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு.திவாகர் அவர்கள் அட்மா திட்டத்தின் செயல்பாடுகளை பற்றி விரிவாக எடுத்து கூறினார்கள். இப்பயிற்சிகான ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர் திருமதி.வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story