
X
T.gode (Mallasamudram) King 24x7 |20 Aug 2024 6:30 PM ISTஎலச்சிபாளையத்தில் பழுதடைந்த தார்சாலைகளை சீரமைக்ககோரி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஊர்வலம் வந்து பி.டி.ஓ.,அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம் நடந்தது.
எலச்சிபாளையம் சந்தைபேட்டை முதல் ஆலங்காடு வரையிலும், துண்டுகாட்டுப்புதூரில் இருந்து ஆயித்தாக்குட்டை வரையிலும், துண்டுகாட்டுபுதூரில் இருந்து நாட்டாங்காடு வழியாக கொன்னையார் வரையில் உள்ள சாலை பலவருடங்களாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இச்சாலைகளை சீர்படுத்தக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இச்சாலைகளை உடனடியாக சீரமைக்ககோரி நேற்று, தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட அமைக்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமையில், ஊர்வலமாக சென்று, எலச்சிபாளையம் பி.டி.ஓ., அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம் நடத்தினர். நிர்வாகிகள் பாண்டியன், மணிகண்டன், சண்முகசுந்தரம், பூமாலை, பழனிவேலு, வரதராஜ், சந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயராமன், சி.பி.ஐ.,மாவட்ட செயலாளர் அன்புமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பி.டி.ஓ., லோகமணிகண்டனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Next Story
