தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் மொபைல் சிசிடிவி கண்காணிப்பு அறிமுகப்படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் தெரிவித்தார்
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருட்கள் நடமாட்டம் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் 80 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது இதேபோன்று மாவட்டம் முழுவதும் 350 குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் விரைவில் மொபைல் சிசிடிவி கண்காணிப்பு அறிமுகப்படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் தெரிவித்தார் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 80 கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிக்கும் பகுதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்லப்பா, மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசும்போது தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் வகையிலும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாநகரப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு அவை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 24 மணி நேரமும் அந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு நடைபெறும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் பொதுவாக கூட்டம் அதிகமாக காணப்படும் தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் திருச்செந்தூர் கோவிலில் பௌர்ணமிக்கு பொதுமக்கள் வாகனங்களில் வருவதை கண்காணிக்கும் வகையிலும் கேமராக்கள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் 350 குற்றச்செயல் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது மேலும் இந்த பகுதிகளில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் மற்றும் கமாண்டோ பயிற்சி பெற்றவர்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக குற்றச்செயல்கள் குறைந்துள்ளது என்றார். அதேபோன்று மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் குற்ற செயல்கள் கொள்ளை வழிப்பறி சமூக விரோத செயல்கள் நடைபெறும் பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் நடமாடும் மொபைல் கண்காணிப்பு கேமராக்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மணல் கொள்ளையை கண்காணிக்கவும் இரவு நேரத்தில் தெளிவாக தெரியும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு அவை கண்காணிக்கப்பட உள்ளது என்றார் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு கூடுதல் காவலர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் மேலும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது மேலும் மருந்து கடைகளுக்கு எந்தவித மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மருந்து மாத்திரை உள்ளிட்டவைகளை வழங்கக் கூடாது என்று மருந்து கடைகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் மேலும் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் அருகே போதை மருந்துகள் விற்பனை தொடர்பாக தகவல் வந்தால் பள்ளி கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு குழு மூலம் அந்த பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மூலம் தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Next Story