எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் தவறும் பட்சத்தில் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் எஞ்சிய 10 பேருக்கு இம்மாதம் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி உத்தரவு.
எல்லைத் தாண்டி மீன் பிடியில் இரண்டு விசைப்படகுகளுடன் தூத்துக்குடி மீனவர்கள் 22 பேர் கடந்த மாதம் 5ம் தேதி மன்னார் வடக்கே வடமேற்கு குதிரைமலைப் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்ய்ப்பட்ட 22 இந்திய மீனவர்களையும் கடந்த மாதம் 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுப்பட்டு கடந்த மாதம் 20ம் தேதி வரை நீதிமன்றம் காவலை நீட்டித்து நீதவான் உத்தறவு பிரப்பித்தார். பின்னர் கடந்த மாதம் 20ம் தேதி மீண்டும் வழக்கு நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு. இம்மாதம் 3ம் தேதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 12 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் (இலங்கை பணம்) தண்டப்பணம் செலுத்துமாறும் செலுத்த தவறுத் பட்சத்தில் 6 மாத காலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 10 பேருக்கு இம்மாதம் 10ம்தேதி வரை நீதிமன்ற வைக்குமாறு நீதிபதி அயோனா விமலரத்ன உத்தரவுவிட்டார்.
Next Story