T.gode (Mallasamudram) King 24x7 |3 Sep 2024 12:23 PM GMT
மல்லசமுத்திரம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு கிராம அடிப்படை பயிற்சியளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் வட்டாரம் மொரங்கம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையம் சார்பாக நேற்று, விவசாயிகளுக்கு கிராம அடிப்படை பயிற்சி முகாம் நடந்தது. நாமக்கல் உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை துணை இயக்குநர் கோவிந்தசாமி தலைமை வகித்து, பயிர் விளைச்சல் போட்டி, உயிர் உரம் பயன்கள் நுண்ணூட்டம், உயிரியல் காரணிகள் பற்றி கூறினார். மல்லசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யுவராஜ் அவர்கள் முன்னிலை வகித்து வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நுண்ணூட்டங்கள், உயிர்உரங்கள் இருப்பு நிலவரம் பற்றி விளக்கமளித்தார். வேளாண் உதவி பொறியியாளர் தங்கராசு அவர்கள் கலந்துகொண்டு வாடகை இயந்திரம், சோலார் திட்டங்கள், மின்மோட்டார் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். வனத்துறை அலுவலர் ராஜேஷ் அவர்கள் கலந்துகொண்டு வனத்துறை மூலம் விவசாயிகளின் வயல்களில் தேக்கு, மகாகனி போன்ற கன்றுகளை நடவு செய்தல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மானியங்கள் பற்றி விளக்கமளித்தார். பட்டு வளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர். செந்தமிழ்செல்வி அவர்கள் நாற்று நடவு, கொட்டகை அமைத்தல், பட்டுப்புழு வளர்ப்பு, தளவாடங்கள் மற்றும் மானியதிட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் உதவி வேளாண்மை அலுவலர் தங்கவேல் கலந்துகொண்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம், பண்ணை தொடர்பு திட்டம், சந்தைப்படுத்துதல் போன்ற திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை அலுவலர் சுதாகர் அவர்கள் கலந்துகொண்டு அட்மா திட்ட செயல்பாடுகள், உயிர்உரங்கள், விதைநேர்த்தி பற்றி கூறி விதைநேர்த்தி செய்வது பற்றிய செயல்விளக்கம் செய்துகாண்பித்தார். பயிற்சியில் மொரங்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணி மற்றும் எண்ணற் விவசாயிகள் கலந்துகொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Next Story