T.gode (Mallasamudram) King 24x7 |4 Sep 2024 1:39 PM GMT
அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்ககோரி நாகர்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பாக, மார்க்சிஸ்டு கம்யூ., கட்சியினர் தர்ணா போராட்டம் செய்தனர்
மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை அருகே, நாகர்பாளையம் கிராமம், நாடார் தெருவிற்குட்பட்ட, அரசு புறம்போக்கு நிலத்தில் பரமத்திவேலூரை சேர்ந்த பாப்பாத்தி60 என்பவர் குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பழனிசாமி65 என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர், திருச்செங்கோடு தாசில்தார், நாகர்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகங்களில் மனு அளித்திருந்தார். இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கலித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 4மணியளவில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில், நார்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பாக அமர்ந்து, அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்ற தகவல்பலகை வைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை அரசு மீட்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கையை எழுத்துபூர்வமாக அதிகாரிகள் எழுதிதர வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வையப்பமலை ஆர்.ஐ.,அமுதா சம்பவ இடத்திற்குவந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, வி.ஏ.ஓ.,மாதேஸ்வரன் எழுத்துபூர்வமாக எழுதிகொடுத்ததின் அடிப்படையில், போராட்டத்தை விடுத்து கலைந்து சென்றனர். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மரப்பரை கிளைச்செயலாளர் சாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story