T.gode (Mallasamudram) King 24x7 |4 Sep 2024 2:10 PM GMT
மரப்பரை கிராமத்தில், விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர் உற்பத்தி குறித்த பயிற்சி நடந்தது.
மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட, மரப்பரை கிராமத்தில், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நடந்த சிறுதானிய பயிர் உற்பத்தி குறித்து நடந்த விவசாயிகள் பயிற்சிக்கு, வட்டார துணைவேளாண்மை அலுவலர் பழனிவேல் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தோட்டக்கலை துணை அலுவலர் முருகவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறுதானியங்களின் வகைகள், சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள், சிறுதானியங்கள் சாகுபடி செய்தல், பூச்சி நோய் தாக்குதல் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள், மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளுதல், மண்புழு உரம் தயாரித்தல் அதன் பயன்கள், போன்ற தொழில்நுட்பங்களை தெளிவாக விளக்கமளித்தார். கால்நடை உதவி மருத்துவர் ஹாரனி அவர்கள் கோமாரி நோய் தடுப்பூசி போடுதல், கால்நடைத்துறையின் திட்டங்கள் பற்றி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் மோகன் அவர்கள் உயிர் உரங்கள், நுண்ணூட்டம் பயன்கள், நுண்ணூட்டம் இருப்பு விபரம், வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள், பற்றி விளக்கமளித்தார். பயிற்சியில் சிறுதானிய உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். பயிற்சியின் முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் நன்றியுரை கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர், பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story