
T.gode (Mallasamudram) King 24x7 |19 Sept 2024 5:41 PM ISTமானத்தி செம்மாங்காட்டுபுதூர் கிராமத்தில், தேசியஊரக பணியாளர்களுக்கு பண்ணைகுட்டையில் தொடர்ந்து பணிவழங்ககோரி மக்கள் பி.டி.ஓ.,அலுவலகத்தில் மனுஅளித்தனர்.
எலச்சிபாளையம் யூனியன், மானத்தில் பஞ்., செம்மாங்காட்டுபுதூர் அருந்ததியர் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2022ல், மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை திட்டத்தில் பண்ணைகுட்டை அமைத்து மக்கள் பணிசெய்து வந்தனர். இப்பண்ணை குட்டையை அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்புசெய்து, சேதாரம் செய்துவிட்டார். மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டு குட்டையை சீரமைத்தனர். இருந்தும் அப்பகுதியை சேர்ந்த தேசியஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு இதுவரையில் அக்குட்டையில் பணிவழங்கவில்லை. எனவே, தொடர்ந்து பகுதி மக்களுக்கு பணிவழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று, எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அப்பகுதியை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மக்கள் மனுஅளித்தனர். தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட அமைப்புகுழு உறுப்பினர் பழனிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
