
X
T.gode (Mallasamudram) King 24x7 |23 Sept 2024 5:53 PM ISTவண்டிநத்தம் கிராமத்தில், தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து பணிகள் துவங்கப்பட்டது.
மல்லசமுத்திரம் யூனியன், வண்டிநத்தம் கிராமத்தில், மத்திய அரசின் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின்கீழ், ரூ.1கோடியே 91லட்சத்து 48ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் தார்சாலை அமைக்கும் பணியை தி.மு.க.,மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில், தி.கோடு எம்.எல்.ஏ.,ஈஸ்வரன், எம்.பி.,மாதேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். கவுன்சிலர் நிர்மலாபழனிவேல், தி.மு.க.,ஒன்றிய செயலாளர் பழனிவேல், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் தமிழ்செல்விசெல்வராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுஅதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
