Thoothukudi King 24x7 |23 Sep 2024 12:45 PM GMT
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடல் பகுதியில் இருந்து நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மீது எம் டி லூபூரா என்ற எரிவாயு கப்பல் மோதி விபத்து ஏற்படுத்தியதுடன் இரண்டு நாட்டுப் படகு மீனவர்களின் படகில் இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான வலைகளையும் கிழித்து சென்று சேதம்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடல் பகுதியில் இருந்து நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மீது எம் டி லூபூரா என்ற எரிவாயு கப்பல் மோதி விபத்து ஏற்படுத்தியதுடன் இரண்டு நாட்டுப் படகு மீனவர்களின் படகில் இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான வலைகளையும் கிழித்து சென்று சேதப்படுத்தியதால் மீனவர்கள் பாதிப்பு தமிழக அரசு மீன்வளத்துறை உரிய இழப்பீடு பெற்று தர மீனவர்கள் கோரிக்கை தூத்துக்குடி புன்னகாயல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சகாயராஜ் மற்றும் தாமஸ் இவர்கள் தங்களது இரண்டு நாட்டுப் படகுகளில் 11 மீனவர்களுடன் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை புன்னக்காயல் கடல் பகுதியில் இருந்து நடுக்கடலில் 9 கடல் மைல் தொலைவில் வலைகளை வீசி மீன்பிடி தொழில் செய்து கொண்டிருந்தனர் அப்போது மார்சல் ஐலேண்ட் தீவை சொந்தமாக கொண்ட எம் டி லூபுரா என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் எரிவாயுவை இறக்கிவிட்டு திரும்பிச் செல்லும்போது தனது வழித்தடத்தில் இருந்து மாறி மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் கடல் பகுதிக்கு சென்றுள்ளது இதில் அங்கே மீன்பிடித்து கொண்டிருந்த சகாயராஜ் என்பவரது படகில் மோதியுள்ளது மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க கடலில் வீசி இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான வலைகளையும் கிளித்து அறுத்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் புன்ன காயல் மீனவ கிராம ஊர்கமிட்டி சார்பாக இன்று மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட மீனவர்கள் சேதம் அடைந்த வலைகளை மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தரையில் போட்டு இவ்வாறு தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமான கப்பலிடமிருந்து தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை தங்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இவ்வாறு தொடர்ந்து நடுக்கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மீனவர்களின் படகுகள் மீது கப்பல்கள் மோதி சேதப்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் சம்பவம் வாடிக்கையாக உள்ளது இதை தவிர்க்க தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் மேலும் கப்பல் மோதி நாட்டுப் படகு மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் துறைமுக நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை ஆகியோருக்கு புகார் அளித்துள்ளதாகவும் உடனடியாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
Next Story