இவ்வாண்டிற்கான-2024 தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தின் கருப்பொருள் “ரத்த நன்கொடையின் 20ம் ஆண்டு கொண்டாட்டம். ரத்தக் கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள்” என்பதாகும்.
அக்டோபர்-1 தேசிய தன்னார்வ ரத்ததான தினம் கடைபிடிக்கப் படுகிறது. இதனையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இவ்வாண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தின் கருப்பொருள் “ரத்த நன்கொடையின் 20ம் ஆண்டு கொண்டாட்டம். ரத்தக் கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள்” என்பதாகும்.இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கி மற்றும் செவிலியர் கல்லூரிகள் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து தேசிய தன்னார்வ இரத்த தான தின விழிப்புணர்வு பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சாந்தா அருள்மொழி தலைமையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் குணசேகரன் மற்றும் ரெட் கிராஸ் செயலர் சி.ஆர்.இராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.முன்னதாக அனைவரும் இரத்த தானம் குறித்த உறுதிமொழி ஏற்றனர். இரத்ததானம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் அன்பு மலர் செய்திருந்தார்.இப்பேரணியில் 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள்,கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டவர்கள் இரத்த தானம் செய்வோம், உயிர்களை காப்போம், வாழ்வின் கொடை இரத்த தானம் உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும், வாசகங்களை முழங்கியும் ஊர்வலமாக சென்றனர்.
Next Story