
X
T.gode (Mallasamudram) King 24x7 |1 Oct 2024 8:13 PM ISTமல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், செயல்படாமல் உள்ள மின்மயானத்தை செயல்படுத்தி, விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் செயல்அலுவர் மூவேந்திரபாண்டியனிடம் நேற்று மனு அளித்தனர்.
இதுஇறித்து, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது; மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள மின்மயானம் கடந்த ஒருவருடமாக செயல்படாமல் உள்ளது. அடக்கம் செய்யும் இடம் மிகவும் குறைவாகன உள்ளதால், அடக்கம்செய்த உடல் மக்கும் முன்னரே அடுத்த உடல் அடக்கம் செய்யும் நிலை உள்ளது. மேலும் சவத்தை எரிக்கும் முறை உள்ள மக்கள் சவத்தை எரியூட்டும்போது, அதிலிருந்து வரும் புகை குடியிருப்புகளுக்கும், எங்கள் பகுதியிலும் வருவதால் எங்களால் குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்வது மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே மின்மயானம் திறந்து செயல்பட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுசம்மந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளதால், சட்டகருத்துக்கு அனுப்பப்பட்டு விரைவில் தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்படும். என செயல்அலுவலர் தெரிவித்தார்.
Next Story
