காந்திஜெயந்தியை முன்னிட்டு, மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், மூத்ததூய்மை பணியாளருக்கு ஒருநாள் செயல் அலுவலர் பதவிவழங்கி கவுரவம் செய்யப்பட்டது.
நேற்று, நாடுமுழுவதும் தேசத்தந்தை மகாத்மாகாந்தியின் 155வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. அதன்படி, மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றிவரும் மூத்த தூய்மை பணியாளர் ஏழுமலை என்பவருக்கு ஒருநாள் டவுன் பஞ்சாயத்து செயல்அலுவலர் பதவிவழங்கி கவுரவிக்கப்பட்டது. 3கோப்புகளில் கையொப்பமிட்டார். மேலும், தூய்மை பணியாளர்கள் அனைவரும் போதைபொருட்களுக்கு அடிமையாக மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தலைவர் திருமலை, செயல்அலுவலர் மூவேந்திரபாண்டியன், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டர்
Next Story