Thirukoilure King 24x7 |3 Oct 2024 3:54 AM GMT
தீர்மானம்
உளுந்துார்பேட்டையில் வி.சி.க., மகளிரணி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பு 47 ல் கூறியுள்ளவாறு மதுவிலக்கை தேசிய கொள்கையாக வரையறுத்து சட்டம் இயற்ற வேண்டும்.மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்குவதோடு, கூடுதல் நிதி பகிர்வு அளிக்க வேண்டும். மதுவிலக்கு விசாரணை ஆணையம் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைபடுத்துவதற்கு ஏற்ப, மதுபான கடைகளை மூடுவதற்கு உரிய கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களை ஈடுபடுத்த வேண்டும். குடி நோயாளிகளுக்கும், போதை அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக மையங்களை ஏற்படுத்த வேண்டும். மதுவிலக்கு பிரசார இயக்கத்தில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Next Story