மேல்முகம் பஞ்சாயத்தை மல்லசமுத்திரம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பஞ்., தலைவர் ராஜா மற்றும் ஊர்பொதுமக்கள் பி.டி.ஓ.,பாலவிநாயத்திடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது; மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட, மேல்முகம் ஊராட்சியினை மல்லசமுத்திரம் இரண்டாம்நிலை நகராட்சியுடன் இணைத்திட அரசு கருத்துகேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் செய்திகள் வரப்பெற்றதை அறிந்தோம். மேல்முகம் ஊராட்சி இன்னும் வளர்ச்சி அடையாத கிராம ஊராட்சியாகவே உள்ளது. விவசாயநிலம், விவசாயிகள், விவசாய கூலிகள் அதிகம் உள்ள கிராம ஊராட்சியாகும். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஊராட்சியாகும். விவசாயத்தை நம்பியே இங்குள்ள பொதுமக்கள் கூலிஜூவனம் செய்து வருகின்றனர். எனவே, திடீரென இரண்டாம்நிலை நகராட்சியுடன் இணைத்தால் பொருளாதாரத்தில் பொதுமக்கள் மிகவும் பின்னடைவை சந்திக்க நேரிடும். எங்கள் ஊராட்சியினை மல்லசமுத்திரம் இரண்டாம்நிலை நகராட்சியுடன் இணைக்கும் முயற்சியினை கைவிட வேண்டும். விவசாயகூலிகள் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் பகுதியான இவ்வூராட்சியினை தொடர்ந்து கிராம ஊராட்சியாக செயல்பட அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Next Story