
X
T.gode (Mallasamudram) King 24x7 |19 Oct 2024 4:51 PM ISTமங்களம் ஊராட்சியை மல்லசமுத்திரம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் பி.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.
மல்லசமுத்திரம் சிறப்புநிலை டவுன் பஞ்சாயத்தை, இரண்டாம்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகின்றது. அதன்படி, மல்லசமுத்திரம் அருகேயுள்ள, மங்களம் ஊராட்சியை மல்லசமுத்திரம் இரண்டாம்நிலை நகராட்சியுடன் இணைத்தால், 100நாள் வேலைதிட்டம் ரத்தாகும், வீட்டுவரி மற்றும் தண்ணீர்வரி 3மடங்கு உயரக்கூடும். கிராம ஊராட்சிக்கு மத்தியஅரசு வழங்கும் மானியம் தடைபடும். சொத்துவரி, தொழில்வரி பலமடங்கு உயரும். எனவே இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி நேற்று, மங்களம் ஊராட்சி மன்ற தலைவர் குப்பாயிமாரிமுத்து மற்றும் பொதுமக்கள் சார்பில் மல்லசமுத்திரம் பி.டி.ஓ., பாலவிநாயத்திடம் கோரிக்கைமனு அளித்தனர்.
Next Story
