
X
T.gode (Mallasamudram) King 24x7 |23 Oct 2024 4:59 PM ISTமல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.3.50 இலட்சத்திற்கு ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் வாரம்தோறும் புதன்கிழமையன்று, பருத்தி ஏலம் நடந்து வருகின்றது. இதில், மேல்முகம், மங்களம், மாமுண்டி, குருக்கலாம்பாளையம், செண்பகமாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விலைந்த பருத்தியை மூட்டைகளாக கொண்டுவந்து விற்பனை செய்துவருகின்றனர். அதன்படி நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 170 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி.,ரகம் குவிண்டாலுக்கு ரூ.7090 முதல் ரூ.7760வரையிலும், கொட்டுபருத்தி ரூ.3890 முதல் ரூ.5110வரையிலும் என மொத்தம் ரூ.3.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
Next Story
