காப்புக்காட்டில்
குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிக்காக 20 வருவாய் கிராமங்களில் உள்ள மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.       குறிப்பாக மெதுகும்மல் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு சென்ட் நிலம் 4 லட்ச ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குன்னத்தூர் கிராமத்தில் உட்பட்ட பகுதியில் ஒரு சென்ட் நிலத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலத்தை வழங்கிய விளாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் சாலைப்பணியை  தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.        இந்த நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னதாக இன்று (11ம் தேதி)சாலை பணியை அதிகாரிகள் துவங்க இருப்பதாக மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே போராட்டக் குழு தலைவர் விஜயராஜ் தலைமையில்  அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில்,  நீதிமன்ற தீர்ப்பு என்ன வருகிறதோ அதன்பிறகு வேலையை துவங்கினால் போதும் அதற்கு தாங்கள் கட்டுபடுவதாகவும் மக்கள் உத்திரவாதம் அளித்தனர்.       இதனையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story