Namakkal (Off) King 24x7 |12 Dec 2024 2:19 PM GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மகளிர் சுய உதவிக்குழுவினர் காளான் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் மகளிர் சுய உதவிக்குழுவினர் காளான் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முத்துகாப்பட்டி, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, அலங்காநத்தம் ஊராட்சிகளில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சார்ந்த 40 மகளிர்களுக்கு காளான் வளர்ப்புக்கென தலா ரூபாய் 2,00,000/- மதிப்பீட்டில் கொட்டகைகளை அமைத்து வழங்கப்பட்டுள்ளது. பழையபாளையம் ஊராட்சியில் மகளிர் காளான் வளர்ப்புக்கு தேவையான உபகரணங்கள், காளான் விதைகள் பெற்று, உற்பத்தி செய்யப்படும் காளான்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். காளான் வளர்ப்பு தொகுப்பில் உள்ள பயனாளிகளில் 30 மகளிர் வங்கியிலிருந்து தலா ருபாய் 1,85,000/- கடன் பெற்று தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் காளான் வளர்ப்பு தொழில் மூலமாக மாதம் 7,000/- முதல் 10,000/- வரை வருமானம் ஈட்டிவருகின்றனர். அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பெண்கள் பயன்படுத்தி கொண்டு தங்களை தொழில் முனைவோர்களாக மேம்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story