கொல்லங்கோடு : 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் ; வாலிபருக்கு போக்சோ
கொல்லங்கோடு அருகே பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்த வள்ள விளை பகுதியை சேர்ந்தவர் ஜெர்வின் (21). இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு சென்று வரும்போது ரெண்டு பேரும் பேசி வந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஜெர்வின் கடந்த செப்டம்பர் மாதம் மாணவியை தனது கிராமத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள பாடடைந்த கட்டத்துக்கு அழைத்து சென்று, சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலத்காரம் செய்தாராம். அதே போல் பலமுறை அழைத்து பலாத்காரம் செய்துள்ளது தெரிய வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. சிறுமியின் தாயார் இது குறித்து மகளிடம் கேட்டபோது, ஜெர்வின் தன்னை பலாத்காரம் செய்ததை கூறினார். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஜெர்வின் மீது போக்சாவில் வழக்கு பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் ஜெர்வின் தலைமறைவானார். தற்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story