உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் 2-ஆம் கட்ட கள ஆய்வு!!
இராசிபுரம் உழவர் சந்தையில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் 2-வது நாள் ஆய்வில் விவசாயிகள் நன்றி.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இராசிபுரம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் 2 –ஆம் கட்டமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் 18.12.2024 அன்று காலை 9 மணி முதல் பல்வேறு அரசுத்துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக 2-வது நாளான இன்று இராசிபுரம் வட்டத்தில் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். இராசிபுரம் வட்டம், பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடுகளை சரி பார்த்து, தூய்மை பணியாளர்கள் தாங்கள் பணியாற்றும் பகுதிகளை தூய்மையாக பராமரிக்கவும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குப்பை சேகரிப்பதற்கான வாகனத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு சுற்றுப்புறத்தினை தூய்மை செய்திடவும் அறிவுறுத்தி, பேட்டரி வாகனத்தினை இயக்க வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, பிள்ளாநல்லூர் பேரூராட்சி 15- வது வார்டு பகுதியில் குடிநீர் விநியோகம் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், குருசாமிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, இராசிபுரம் நகராட்சி, பாரதிதாசன் சாலை, நகராட்சி நடுநிலைப்பள்ளி, சிங்களாந்தபுரம் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் ஆகிய பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு, மொத்தம் பயன்பெறும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, உணவின் தரம், சமையல் கூடத்தில் உணவுப்பொருட்களின் இருப்பு, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்தும், இராசிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலிருந்து காலை உணவு விநியோகப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இராசிபுரம் பேருந்து நிலையத்தில் பெண் பயணிகளிடம் விடியல் பயண திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து பேருந்தில் ஏறி கலந்துரையாடினார். பிள்ளாநல்லூர் பேரூராட்சி பொது சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அதனை தூய்மையாக பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, இராசிபுரம் உழவர் சந்தையில் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, உழவர் சந்தையில் காய்கறிகளின் வரத்து, பொருட்களின் தரம், விற்பனை விபரம் குறித்து கலந்துரையாடினார். தொப்பம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு தினசரி கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு, பால் பரிசோதிக்கப்படும் முறை, பால் கொள்முதல் விலை, சங்கத்தில் உள்ள மொத்த பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட விவரங்களையும், உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை உள்ளிட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்தார். முன்னதாக 18.12.2024 அன்று இரவு இராசிபுரம் அரசு மருத்துவமனையில் வெளிபுற நோயாளிகள் பகுதி, மகப்பேறு பிரிவு, மகளிர் அறை, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, கண்காணிப்பு அறையில் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை மற்றும் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, இராசிபுரம் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியினை பார்வையிட்டு, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம், மாணவர்களின் விவரம், தினசரி உணவு பட்டியல், உணவின் தரம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவை குறித்து விரிவாக கேட்டறிந்து, மாவட்ட ஆட்சியர் விடுதியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், இராசிபுரம் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறைகள் சார்ந்த உயர் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
Next Story