நாகர்கோவில்
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் நேற்று (21-ம் தேதி)  நாகர்கோவிலில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-   கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள், நீர் நிலைகளை அழிக்க கூடாது என்பது போன்ற கவலைகள் மக்களுக்கு உள்ளது. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், மாமிச கழிவுகள்  கொண்டு கொட்டப்பட்டு, கேரளாவின்  குப்பை கிடங்காக  குமரி மாவட்டம் திகழ்கிறது.       டிசம்பர் 30-ம் தேதி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அதில் கலந்து கொள்வது பாராட்டுக்குரியது. தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் திருவள்ளூர் சிலையை திறந்து வைத்திருந்தார். இன்றைய முதல்வர் வெள்ளி விழா நடத்துவது பாராட்டக்கூடியது. இதற்கு ஆசிரியர்கள் வரவேண்டும் என்ற கல்வி அமைச்சர் உத்தரவு கொடுத்தது கண்டனத்துக்குரியது.         அல் உம்மா நிறுவனராக இருந்த பாஷா இறுதி ஊர்வலத்தில் 1500 போலீசார் கலந்து கொண்டது கண்டனத்துக்குரியது.  இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அத்தனை பேரையும் அரவணைக்கும் பொறுப்பு தமிழ்நாடு முதல்வருக்கு உண்டு.  டாக்டர் அம்பேத்கர் என்னை பொறுத்தவரை அவர் மதிக்கப்பட்டு, கவரப்படுத்த வேண்டிய தலைவர். அம்பேத்கரை வைத்து அரசியல், பிரித்தாளும்  சூழ்ச்சி வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story