தற்கொலை
Erode King 24x7 |27 Dec 2024 5:14 AM GMT
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
ஈரோடு, சாஸ்திரி நகரை அடுத்துள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (33). இவரது மனைவி நந்தினி (31). ரஞ்சித் குமார் மதுவுக்கு அடிமையாகி தினமும் மது அருந்தி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடைய தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மது குடிப்பதை நிறுத்துமாறு நந்தினி சொல்லும் போதெல்லாம், மது குடிப்பதை நிறுத்தினால் நான் இறந்து விடுவேன் எனக் கூறி ரஞ்சித் குமார் மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற நந்தினி, அன்றிரவு மருத்துவமனையிலேயே இரவு தங்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து மறுநாள் அவர் காலையில் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, ரஞ்சித்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே ரஞ்சித் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story