கைது

கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது
அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு டவுன் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பெருந்துறை, பவானி ரோடு வாரச் சந்தைப் பகுதி, பெருந்துறை சிப்காட் பேருந்து நிறுத்த பகுதி மற்றும் ஈரோடு சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மேற்குவங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டம், சந்தெலிபில் பகுதியைச் சேர்ந்த காதர் காசி (36), மரப்பாலம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பாபு (47), மேற்குவங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டம், உத்தர்போல்ட்லா பகுதியைச் சேர்ந்த ஷகிலா பிபி மற்றும் சாஸ்திரி நகர், காமராஜ் வீதியைச் சேர்ந்த அப்துல் கலாம் (21) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 9,400 மதிப்பிலான 940 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Next Story