Virudhunagar King 24x7 |3 Jan 2025 7:12 AM GMT
திருச்சுழி அருகே சுதந்திரம் கிடைத்து 77 ஆண்டுகளாகியும் பேருந்து வசதியே கண்டிராத பெரிய சோழாண்டி கிராமம்; பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் நியாய விலைக் கடை பள்ளியாக மாறிய அவலம் சுகாதார வளாகம், கழிவு நீர் கால்வாய் நல்ல குடிநீர், முறையான மயான வசதி என அடிப்படை வசதிகள் இன்றி சிரமம் அடையும் விருதுநகர் மாவட்டத்தின் மாவட்டத்தின் கடைக்கோடி கிராம பொதுமக்கள் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் வாகைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய சோழாண்டி கிராமத்தில் சுமார் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான இந்த பெரிய சோழாண்டி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். முற்றிலும் அமைதியான சூழலில் வாழ்ந்து வரும் பெரிய சோழாண்டி கிராம பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த பெரிய சோழாண்டி கிராமத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கமுதி, அருப்புக்கோட்டை போன்ற ஊர்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். சுதந்திரம் கிடைத்து 77 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த கிராமம் பேருந்து வசதியை கண்டிராமல் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்தில் ஏறி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை உள்ளிட்ட இதர தேவைகளுக்கு வெளியூர் செல்ல நேர்ந்தாலும் ஆட்டோ பிடித்து தான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு அதிக அளவு பொருட்செலவு ஆவதாகவும் அப்போது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி கட்டிடம் முழுவதும் சேதமடைந்து இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழி இன்றி பள்ளிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. அங்கு படிக்கும் பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவரும் அருகிலுள்ள பகுதி நியாய விலை கடை கட்டிடத்தில் அமர்ந்து பாடம் படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி நேர நியாய விலை கடை கட்டிடமே தற்போது பள்ளியாக செயல்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி நியாய விலை கடைக்காக ஊர் மக்களே அருகில் ஒரு சிறிய கட்டிடம் அமைத்துக் கொடுத்துள்ளனர். மேலும் இந்த ஊரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது இடிந்து விடுமோ என்ற சூழலில் ஆபத்தான நிலையில் சேதம் அடைந்து காணப்படுகிறது. ஜல்ஜீவன் திட்டத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களும் பல இடங்களில் பழுதடைந்து உடைந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. தண்ணீர் விநியோகமும் முறையாக செய்யப்படுவது கிடையாது எனவும் இதனால் குடிநீரை விலை கொடுத்து தான் வாங்கி பருக வேண்டிய சூழல் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் தண்ணீர் வசதி இன்றி இருப்பதால் மூடியே கிடக்கிறது. இதனால் பெண்களும் குழந்தைகளும் திறந்தவெளியை பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மயானத்திற்கு செல்லும் சாலையும் சேரும் சகதியும் நிறைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் இங்கு சடலங்களை கொண்டு செல்ல முடியாமல் தோளில் சுமந்து தான் பயானத்திற்கு சடலங்களை கொண்டு சென்று எரியூட்ட வேண்டி இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மயானத்தில் மின் வசதி தண்ணீர் வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்கள் பகுதிக்கு 100 நாள் வேலைத்திட்டம் வழங்கப்படுவது கிடையாது எனவும் மாவட்டத்தின் கடைசி ஊராக இருப்பதால் அதிகாரிகள் தங்களை புறக்கணிப்பதாகவும் அப்பகுதி பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இங்குள்ள காலணி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாமல் கழிவுநீர் அனைத்தும் வீதியில் தேங்குகிறது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழி இன்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் ஒரு பேருந்து வசதி கூட இல்லாமல் தங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கும் பெரிய சோழாண்டி கிராம மக்கள் தமிழக அரசு தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டிகள் 1.அருண் சிங் 2.விஜயலட்சுமி
Next Story