திருமருகலில்
Nagapattinam King 24x7 |4 Jan 2025 6:27 AM GMT
கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சன்னியாசி பனங்குடி அக்ரஹார தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மகள் துளசிகா ( 22). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், துளசிகா கடந்த 1-ம் தேதி இரவு சாப்பிட்டு விட்டு நான் தூங்க போகிறேன் என்று கூறி விட்டு அறையின் கதவினை பூட்டி கொண்டார். காலையில் வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த துளசிகாவின் பெற்றோர் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, அருகில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு துளசிகா பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் துளசிகாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த, குத்தாலம் கிராம நிர்வாக அலுவலர் கல்யாணசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில், திட்டச்சேரி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துளசிகாவின் உடலை கைப்பற்றி, நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுக் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story