X
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் தாலுகா மேல்வைலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது விவசாய நிலத்தை அளவீடு செய்ய அணுகியபோது, மேல்மலையனுார் தாலுகா அலுவலக சர்வேயர்கள், இடைத்தரகர் மூலம் 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.இது குறித்து குமாரின் மருமகன் மாணிக்கம், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று மதியம், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்ரபாணி உள்ளிட்டோர் தாலுகா அலுவலகத்தில் ரகசியமாக கண்காணித்தனர்.அப்போது ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மாணிக்கம், சர்வேயர்களிடம் தந்த போது, இடைத்தரகர் சரத்குமாரிடம் தருமாறு கூறினர்.அங்கிருந்த சரத்குமாரிடமிருந்த பணத்தை கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார், இடை தரகர் சரத்குமார், 28, தலைமை சர்வேயர் தங்கராஜ், 37, லைசன்ஸ் சர்வேயர் பாரதி,32, ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். மூவரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story