பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
Komarapalayam King 24x7 |8 Jan 2025 1:58 PM GMT
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சிவகுமார் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் சண்பகராமன் பங்கேற்றார். இதில் தொழிற்சங்கத்தின் சார்பில் 20 சதவீதம் போனஸ் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது குறித்து கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது: விசைத்தறி தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் 20 சதவீதம் போனஸ் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், செயற்குழு., பொதுக்குழுவினரிடம் கலந்து பேசி, ஜன. 7ல் தங்கள் முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தோம். கடந்த ஆண்டு போல 8.20 சதவீதம் போனஸ் வழங்க சம்மதம் என்று கூறினோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் 8.33 சதவீதம் கேட்டார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் அந்த தொகை கொடுக்க சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளோம். முடிவு எட்டப்படாமல் கூட்டம் நிறைவு பெற்றது. இவ்வாறு அவர் கூறினார். இதில் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன், நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க செயலர் பூபதி, தொழிற்சங்க நிர்வாகிகள் பாலுசாமி, சரவணன், நஞ்சப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story