தேரோட்டம்

தேரோட்டம்
அருள்மிகு பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூரில் பழமைவாய்ந்த அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் துவங்கி தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழாவானது கடந்த 26 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியதையடுத்து சந்தனகாப்பு அலங்காரம உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் கடந்த 15நாட்களாக நடைபெற்று வந்தது அதனைத்தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழச்சியில் ஈரோடு மாவட்டம் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்துகொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து திருவிழாவினை துவங்கி வைத்தனர் இந்த தேரோட்டம் நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர்,சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை இழுத்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிகழ்ச்சிக்காக கோபி துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 100 கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story