X
அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது; சுமார் ரூ 25,000 மதிப்புடைய புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து நகர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் அதிக அளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை எடுத்து நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உமா மாலினி தலைமையிலான போலீசார் திருச்சுழி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் லாட்ஜ் அருகே சந்தேகப்படும்படியான வகையில் நின்று கொண்டிருந்த உர டிப்போ தெருவை சேர்ந்த முத்து விஜயபாண்டி(54) மற்றும் வீராசாமி தெருவை சேர்ந்த கருப்பசாமி(50) இருவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.‌ இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதித்ததில் அதில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் ரூ 25,000 மதிப்புடைய 450 பாக்கெட் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக இருவரையும் கைது செய்தனர்.‌
Next Story