X
அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நீரில் மிதந்த நிலையில் சடலமாக மீட்பு; தீயணைப்பு துறை உதவியுடன் உடலை கைப்பற்றி இறந்தது யார் என நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது.‌ இந்த தெப்பக்குளத்தில் உள்ள நீரில் இன்று அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக மிதந்து கிடப்பதாக நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.‌ உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் தெப்பத்தில் உள்ள நீரில் இறங்கி அந்தப் பெண்ணின் உடலை மீட்டனர். போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பெண் யார் என்று அடையாளம் காண முடியாத நிலையில் நீரில் மூழ்கி இறந்த கிடந்தது யார் அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை தவறி விழுந்து இறந்தாரா இல்லை வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
Next Story