கண்காணிப்பு

கண்காணிப்பு
X
வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவினை சி.சி.டி.வி கேமரா பொருத்தி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு
வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவினை சி.சி.டி.வி கேமரா பொருத்தி மாவட்ட தேர்தல் அதிகாரி, சென்னையில் இருந்து தமிழக தேர்தல் அதிகாரி, டெல்லியில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் பதிவாகும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் கண்காணிக்கப்பட்டது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவில் சிறிது தோய்வு ஏற்பட்டது. பின்னர் 4 மணி முதல் மீண்டும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 237 வாக்குச்சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவுனை கண்காணித்தனர். பொதுமக்கள் வாக்களிக்கும் வசதியாக இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடிகள் அமைந்திருக்கும் நான்கு புறமும் 200 மீட்டர் தூரத்தில் அரசியல் கட்சியினர் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டது. தொகுதி முழுவதும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர். முதன் முதலில் தேர்தல் வாக்களிக்க ஏராளமான இளம் பெண்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். வாக்களிக்க வந்த பொது மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அந்தந்த நிலைய அலுவலர்கள் விளக்கம் அளித்து அவர்கள் வாக்களிக்க உதவினர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு பத்திரமாக கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்படும். அந்த அறையின் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். இதைத் தொடர்ந்து வரும் 8-ந் தேதி (சனிக்கிழமை) வேட்பாளர்கள் முகவர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரம் அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும். அன்று மதியம் முடிவுகள் தெரிந்துவிடும்.
Next Story